Blogcrowds Blogger Templates

பதிவு: வரவனையான்

தமிழ்நாட்டுல ஒரு பாட்டு பரவலா அனைவருக்கும் பிடிச்சு தொலைஞ்சுடுச்சுன்னா பேருந்து , தானி ( ஆட்டோ) வானொலி, தொலைக்காட்சிகளின் இசை நிகழ்ச்சி. செல்லிடபேசியின் அழைப்பொலி,அழைப்பவர் கேட்டே தொலைய வேண்டிய "அழைப்பவர் ஒலி" இன்னபிற மகிழுந்து பின்னால் வருவது குறிக்கும் ஓசை என அகிலமெங்கும் அந்த பாடலை ஒலிக்க வைத்து ஒரு சலிப்பை ஏற்படுத்துவது ஒரு கலாச்சாரமாகி விட்டது. கடைசியாய் அப்படி ஒரு நல்ல பாட்டு கொலைவெறியோடு முடித்துவைக்கப்பட்டது,அது "பார்த்த முதல் நாளே". ( படம் - வேட்டையாடு விளையாடு )

அதற்கு பிறகு மாட்டிருப்பது இந்த "கண்கள் இரண்டால்" என்கிற சுப்பிரமணியபுரம் படத்தின் பாடல். எனக்கும் பாட்டு பிடிக்கிறது என்றாலும் அதன் காட்சியமைப்பு மிகவும் பிடித்திருக்கிறது. அதிலும் பாடலின் முதல் நிமிடத்தின் 50வது விநாடியில் அந்த பெண் நாயகனின் நண்பனை பார்த்து வக்கனை காட்டுவாள், எண்ணி பார்த்தால் என்னை பார்த்தும் வாழ்வில் ஒரே ஒரு பெண் அப்படி செய்தாள். நினைவுகளை தூண்ட இது போதாதா. "இந்த கண்களை என் செய்வது" என பாண பத்திர ஓணாண்டி ரேஞ்சு கவிதை ஒன்னு மனசுக்குள் பட படவென கெளம்புவதையும் தடுக்க முடியாஅது

குறிப்பு: அவள் அப்படி வக்கனை காட்டிய போதும் நான் இந்த பட நாயகன் "ஜெய்" ரேஞ்சுக்கு இளிச்சவாயுடன் தலையை ஆட்டிக்கொண்டிருந்த கதையும் உண்மைதான்

பாடல் கேட்போமா



கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்


பேச எண்ணி சில நாள்,
அருகில் வருவேன்,
பின்பு பார்வை போதும் என நான்,
நினைத்தே நகர்வேனே, ஏமாற்றி
கண்கள் எழுதும்,
இரு கண்கள் எழுதும்,
ஒரு வண்ணக்கவிதை காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே,
இதில் ஓசை இல்லையே,
இதை இருளிலும் படித்திட முடிகிறதே!

இரவும் அல்லாத, பகலும் அல்லாத,
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத, படவும் கூடாத,
இடைவெளி அப்போது குறையுமா?


மடியினில் சாய்ந்திட துடிக்குதே....
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை...


கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்


கறைகள் அண்டாத, காற்றும் தீண்டாத,
மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய்...

உடலும் அல்லாத, உருவம் கொள்ளாத,
கடவுளை போல் வந்து கலந்திட்டாய்...

உனையன்றி வேறோரு நினைவில்லை...
இனி இந்த ஊனுயிர், எனதில்லை...
தடையில்லை, சாவிலுமே, உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா?
ஒரு வார்த்தை இல்லையே,
இதில் ஓசை இல்லையே,
இதை இருளிலும் படித்திட முடிகிறதே..


பேச எண்ணி சில நாள்,
அருகில் வருவேன்,
பின்பு பார்வை போதும் என நான்,
நினைத்தே நகர்வேனே, மாற்றி

கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால்,
என்னை கட்டி இழுத்தாய், இழுத்தாய்....
போதாதென,
சின்ன சிரிப்பில், ஒரு கள்ளச்சிரிப்பில்..
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்,

13 comments:

//எண்ணி பார்த்தால் என்னை பார்த்தும் வாழ்வில் ஒரே ஒரு பெண் அப்படி செய்தாள். நினைவுகளை தூண்ட இது போதாதா//

அப்போ எண்ணாம பாருங்க...எத்தனை பெண்டுகள் அப்படி செஞ்சு உங்களைத் தூண்டி விட்டாங்கன்னு தெரியும்...
அட...நினைவுகளை தாம்பா...

ஹாஹா

August 11, 2008 5:21 AM  

வரவனையான் ரசிகர்கள் கொலை வெறியுடன் கும்ம காத்திருக்கிறார்கள், உள்ளே வரலாமா ???????

August 11, 2008 5:23 AM  

ஸாற்ற்ற்

உள்ற வரலாமா?

August 11, 2008 5:27 AM  

எலேய் அதுஎன்னலேய்

சொந்த செலவுல ஷேவிங்கு?

August 11, 2008 5:30 AM  

நாங்களும் ஒரு பதிவு போடச் சொல்லி கேட்டாக்கா தூயாக்கா போடுவாங்களா?

August 11, 2008 5:31 AM  

பொட்டிக்கடையுடன் கொண்ட நட்பு
புலிவாலை பிடித்த கதை
இல்லை இல்லை - புலி
என் வாலை பிடித்த கதை
- வரவனையானின் "ரகசிய கவிதைகள்" தொகுப்பிலிருந்து

August 11, 2008 5:34 AM  

மாம்ஸூ,

கிட்டத்தட்ட லக்கியோட டமாரு கொமாரு அப்படியே நம்மளோட போண்டா கனேசனை இமிடேட் பண்றார். கொமாரு
அப்பப்போ கம்மூனிஸம் வேற பேசறாரு...

சீக்கிரம் நம்ம அரைடிராயர் பாண்டியையும், போண்டா கணேசனையும் ரிலீஸ் செய்யவும்

August 11, 2008 5:36 AM  

//தம்பி டமாரு கொமாரு said...

நாங்களும் ஒரு பதிவு போடச் சொல்லி கேட்டாக்கா தூயாக்கா போடுவாங்களா?//

தம்பி டொமாரு, தூயாக்காவுக்கான சகோதர எண்ணிக்கைகள் அவுசுதிரேலியாவின் மொத்த மக்கட்தொகைய விட அதிகம்...ஆகையினால அடுத்த பிறவில வேணா ஆசைபட்டுக்கோ

கிகிகி

August 11, 2008 5:38 AM  

தூயாக்கா, வரவணயன்னே...

சூப்பர் பாட்டுன்னே...ஒன்ஸ் மோர்னே

August 11, 2008 5:40 AM  

//மாம்ஸூ,

கிட்டத்தட்ட லக்கியோட டமாரு கொமாரு அப்படியே நம்மளோட போண்டா கனேசனை இமிடேட் பண்றார். கொமாரு
அப்பப்போ கம்மூனிஸம் வேற பேசறாரு...

சீக்கிரம் நம்ம அரைடிராயர் பாண்டியையும், போண்டா கணேசனையும் ரிலீஸ் செய்யவும் //

அப்படியா, அதனாலென்ன இருக்கட்டும்.

"திடீர்"முருகேசன்ன்னு ஒரு மேட்டர் இறக்குமதி ஆகப்போகுது. செம கும்மு கும்மலாம்

August 11, 2008 5:54 AM  

நன்றி
நாயகியின் பர்வைக்காக பலமுறை பார்க்க்க்லாம்

January 11, 2009 6:19 AM  

vithiyasamana pathivu thalaiva

Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha oru vote panunga :-)

Kandipa ungaluku pidikum endru nambugiran.

http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?

அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,

உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

March 3, 2009 1:13 AM  

March 10, 2009 5:35 AM  

Older Post Home