பாடல் கேட்பது அரிதாக இருந்ததை புது செல்லிடப்பேசி மாற்றிவிட்டது. ஆனாலும் 2 ஜிபி கார்ட் வச்சுகிட்டு 300 பாட்டு அப்லொட் செய்து காதுல இயர்போன் மாட்டி கண்கிறங்க பேருந்தில் போகும் பழக்கம் இல்லையென்றாலும். ஒரு 5 முதல் 10 பாடல்களே வைத்திருப்பேன். அதில் முதல் 5 பாடல்களை இந்த ஆண்டு எனக்கு பிடித்த பாடல்களாக வரிசைப்படுத்தலாம் என்றே இந்த பதிவு.
உண்மையில் யுகபாரதி "ஒக்காந்து யோசிச்சிருப்பாரோன்னு"தான் இந்த பாட்டை கேக்கும்போதெல்லாம் நினைப்பு வரும்.
காதாலாகி கசிந்துருக வைக்கும் இந்த பாடல்தான் என் தனிப்பட்ட அழைப்பொலி ;)
வாங்க கேக்கலாம்
( பாடல் வரிகளை தமிழில் கொடுத்த இம்சை அரசிக்கு நன்றி )
ஆண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பெண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
ஆண்: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்ல கோபம்
பெண்: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே
(பேருந்தில்)
ஆண்: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் வருகிற முதல் கூச்சம்
பெண்: பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை
ஆண்: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
பெண்: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே
(பேருந்தில்)
(பேருந்தில்)
ஆண்: தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெண்: தேய்பிறை போல் படும் நகக் கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
ஆண்: செல்ஃபோன் சிணிங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
பெண்: எழுதும் கவிதையின் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே
(பேருந்தில்)
(பேருந்தில்)
படம்: பொறி
இசை: தினா
பாடியவர்கள்: M.பாலகிருஷ்ணா, மதுஸ்ரீ


//புது செல்லிடப்பேசி மாற்றிவிட்டத//
ok i got the point :P
தூயா [Thooya] said...
December 17, 2007 3:19 AM
இப்பத்தான் இந்த பாட்ட கேட்டுட்டு இருந்தேன். இங்க வந்து பாத்தா நீங்களும் போட்டு இருக்கீங்க.
எப்டி இருக்கீங்க வரவனையார்? ;-)
முபாரக் said...
December 17, 2007 1:24 PM