Blogcrowds Blogger Templates

அறிவுமதி அண்ணனின் திரையிசைப்பாடல்கள் அவரின் கவிதைகளைப்போலவே என்னை மிகவும் கவர்ந்தது. மிக மெல்லிய உணர்வுகளை தூண்டும் இந்த பாடல் மிகப்பிடித்த பாடல்களில் ஒன்று.

இந்த பாடலினூடே "அவளின் மௌனம் பார்த்து பதை பதைக்கும் என் மனம்" என்கிற வரி என்னுள்ளே ஒரு குறும்புன்னகையே எப்போது வரவழைத்திருக்கிறது.

"போகிற இடத்தில்
என்னை விட அழகாய்'
அறிவாய் எவனும்
இருந்துவிட போகிறான்
என்கிற கவலை - நல்லவேளை
நட்பிலில்லை" என்று ஆண்-பெண் நட்பை போற்றிய அறிவுமதியிடம் இருந்து வந்த காதலுறிய கவிதைகள் பட்டாம்பூச்சிகளை மனதுள் பறக்கவிடும் ஆச்சரியத்தையும் அனுபவிப்பதில்தான் எத்துனை சுகம்.


1 comments:

//அறிவாய் எவனும்
இருந்துவிட போகிறான்//

உங்கள திருத்தவே முடியாது.....

இவண்
அறிவில்லாதவன்

October 4, 2009 12:39 PM  

Newer Post Older Post Home