Blogcrowds Blogger Templates

எம்மை நினைத்து யாரும்

இந்த பாடலை நான் 1000 தடவைகளாச்சும் கேட்டிருப்பேன். வீரம் மிக்க பாடல். முன்னரே நானும் என் ஈழமும் பகுதியில் எழுதியுள்ளேன்.

எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே வளரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரை துடைத்தே வாருங்கள்
எங்கள் காவிய நாயகன் பாதையிலே அணியிலே சேருங்கள்

(2)

வாழும் போது மானத்தோடு வாழ்பவன் தானே தமிழன்
தன் வாசலில் அடிமை சேவகம் செய்து வாழ்பவன் என்ன மனிதன்
(2)
வழியில் இடரும் பகைகள் எரிய வருக வருக தமிழா
(2)
உன் விழியில் வழியும் நீரை துடைத்து வெளியே வருக தமிழா
(2)


எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே வளரும் சின்ன பூக்கள் வாடாது
(2)

காற்றும் நிலவும் யாருக்கெனினும் கைகள் கட்டுவதில்லை
நாங்கள் போகும் திசையில் சாகும்வரையில் புலிகள் பணிவதுமில்லை
(2)
மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள் முழைப்போம் இந்த மண்ணில்
(2)
எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து மூட்டும் தீயை கண்ணில்

எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே வளரும் சின்ன பூக்கள் வாடாது
கண்ணில் வழியும் நீரை துடைத்தே வாருங்கள்
(2)
எங்கள் காவிய நாயகன் பாதையிலே அணியிலே சேருங்கள்
(2)
எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே வளரும் சின்ன பூக்கள் வாடாது

பாடலை கேட்க: (நன்றி: Connecttamils.com)
http://connecttamils.com//index.php?option=com_artistavenue&task=playSong&mode=HQ&id=152&Itemid=30

1 comments:

மிக நல்ல பாடல் தூயா, இந்த முயற்சி நிச்சியம் வெற்றி பெறும்.

"ஒளிதோறும் புலி முகம்" தொகுப்பில் இருந்து "வீரம் புலி வீரம்" பாடலையும் வாசகர்களுக்கு அறிமுகபடுத்துங்களேன். அண்ணன் அறிவுமதியின் நெருப்பு வார்த்தைகள் அணிவகுக்கும் அப்பாடல் எனக்கு மிகபிடித்த ஒன்று

April 17, 2007 1:27 AM  

Newer Post Older Post Home